வலங்கைமான் அருகே தீயில் எரிந்து 2 வீடுகள் சாம்பல் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
வலங்கைமான் அருகே தீயில் எரிந்து 2 வீடுகள் சாம்பலானது. இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஏரிவேளூர் ஊராட்சி வேலாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அசோக். இவர் தனது குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஜெயராமன் மனைவி இந்திராகாந்தி என்பவரும் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று 2 வீட்டுகளில் மேலே சென்ற மின்கம்பிகள் காற்றில் கூரையின் மீது உரசி தீப்பிடித்துள்ளது.இந்த தீ மளமளவென 2 வீடுகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த வலங்கைமான் தீயணைப்பு நிலைய அலுவலர் மூர்த்தி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 2 கூரை வீடுகளிலும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டுகளில் இருந்து அனைத்து பொருட்கள், ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.