48 ஆண்டுகளாக உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்
சுவிட்சர்லாந்தில் ஒருவர் 48 ஆண்டுகளாக உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
மேலைநாடுகளில் போக்குவரத்து தொடர்பான விதிகள், சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும். அப்படியிருந்தும், சுவிட்சர்லாந்தில் ஒருவர் 48 ஆண்டுகளாக உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
தனது 14 வயது முதல் வாகனம் ஓட்டிவரும் அவர், போலீஸ் சோதனை எதிலும் இதுவரை மாட்டியதில்லை எனத் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஸுர்ஜிபீட் பிராந்திய போலீசார், குறிப்பிட்ட நபரை சமீபத்தில் கைது செய்தனர்.
கிளீன்டாட்டின்ஜென் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்த போலீசார், அந்த நபரின் வாகனத்தை மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, தன்னிடம் வாகன ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
தனது 14 வயது முதலே வாகனம் ஓட்டி வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் இதுபோன்ற வழக்கு இதுவே முதல்முறை என்று கூறிய போலீசார், அந்த நபர் இனி வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்படும் என்றனர்.