இங்கிலாந்தில் ரவுடி கும்பல்களில் சிறுவர்கள்
இங்கிலாந்தில் ரவுடிக் கும்பல்களில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
சுமார் 10 முதல் 17 வயது வரையிலான அந்தச் சிறுவர்கள் தங்களை ரவுடி கும்பல்களின் அங்கம் என்று கூறிக்கொள்வதாக ‘சில்ரன்ஸ் கமிஷனர்’ அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
அவர்களில் பெரும்பாலானோருக்கு ரவுடி கும்பலின் உறுப்பினர் என்றால் என்ன என்பது தெரிந்திருக்கிறது என்றும், மோசமான வன்முறைக் குற்றங்களில் பலர் ஈடுபட்டுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர்களை ரவுடி கும்பலில் சேர்ப்பதற்கு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது.
குண்டர் கும்பல்களுக்குள் இழுக்கப்படும் அபாயத்தில் உள்ள சிறுவர்களைப் பாதுகாப்பது தங்கள் கடமை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனநலப் பிரச்சினைகள், குடும்ப வாழ்க்கையில் நிராகரிக்கப்படுபவர்கள் போன்ற சிறுவர்கள்தான் ரவுடி கும்பல் களுக்கு எளிதில் இலக்காகின்றனர்.