கிண்டியில் விபத்தில் சிக்கிய காரில் துப்பாக்கி இருந்ததால் பரபரப்பு

கிண்டியில் விபத்துக்குள் ளான காரில் இருந்த ஏர்கன் துப்பாக்கியை மீட்ட போலீசார், இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-03-07 23:15 GMT
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் வேதஅருள் (வயது 54). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று அதிகாலை கிண்டி பாலம் அருகே அதிவேகமாக காரை ஓட்டிச்சென்றார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற 2 கார்கள் மீது மோதியது.

இதில் இரண்டு கார்களின் பின்பக்கமும் சேதமடைந்தது. நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 2 கார்களில் இருந்தவர்களுக்கும், வேதஅருளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட் டது. அப்போது ரோந்து பணியில் இருந்த வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். அதில் வேதஅருள், குடி போதையில் காரை ஓட்டி வந்து விபத்துக்குள்ளாக்கியதாக தெரிய வந்தது.

பின்னர் வேதஅருளின் காரை சோதனை செய்தபோது, அதில் பறவைகளை சுடும் ஏர்கன் துப்பாக்கி ஒன்று இருந்தது.

இதையடுத்து காரையும், அதில் இருந்த ஏர்கன் துப்பாக்கியையும் கிண்டி போலீசாரிடம் ஒப்படைக் கப்பட்டது.

காரை குடிபோதையில் ஓட்டி வந்ததாக வேதஅருள் மீது கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மேலும் ஏர்கன் துப்பாக் கியை பறிமுதல் செய்த கிண்டி போலீசார், இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்