திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மூதாட்டி பலி
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஒண்டிகுப்பத்தை சேர்ந்தவர் ஞானம்மாள் (வயது 75). இவர் நேற்று முன்தினம் தன்னுடைய எதிர் வீட்டில் வசிக்கும் அருண்விஜய் (28) என்பவருடன் வேலையின் காரணமாக திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஒண்டிகுப்பம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அருண் விஜயின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருண்விஜய், ஞானம்மாள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். ஞானம்மாள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் ஞானம்மாள் இறந்துபோனார்.
அருண்விஜய் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.