மாநிலம் முழுவதும் 10-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் 1.22 கோடி குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது

மராட்டியம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் 10-ந் தேதி நடக்கிறது. 1 கோடியே 22 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

Update: 2019-03-06 23:00 GMT
மும்பை,

மராட்டியம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் 10-ந் தேதி நடக்கிறது. 1 கோடியே 22 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

மராட்டிய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சொட்டு மருந்து முகாம்

மராட்டியம் முழுவதும் வருகிற 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து வழங்கப்படும்.

இதற்காக 82 ஆயிரத்து 719 சொட்டு மருந்து முகாம்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும். 13 ஆயிரத்து 927 நடமாடும் முகாம்களும் செயல்படும்.

இந்த பணியில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 313 ஊழியர்களும், 16 ஆயிரத்து 548 மேற்பார்வையாளர்களும் ஈடுபட உள்ளனர். கடந்த ஆண்டு 1 கோடியே 20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 1 கோடியே 21 லட்சத்து 98 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மந்திரி வேண்டுகோள்

இது தொடர்பாக சுகாதாரத்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். பொதுமக்கள் அனைவரும் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து வழங்க முன்வர வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்