அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பணியிட மாறுதல் செய்யப்படுவதை கண்டித்து கரூர் தாந்தோன்றிமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-03-06 22:45 GMT
கரூர்,

நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி, வருவாய்த்துறையினர் பலர் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் செய்யப்படுவதை கண்டித்து கரூர் தாந்தோன்றிமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல், வருவாய்த்துறை மாவட்ட தலைவர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் எம்.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். இதில் அரசு ஊழியர் சங்கத்தினர், வருவாய் சங்கத்தினர், ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்