வானவில் : ஆட்டோமேடிக் சுவிட்ச்
பிளாக்கெட் எலெக்ட்ரோடெக் நிறுவனம் மின் சக்தியை சேமிக்கும் உணர் கருவி கொண்ட சுவிட்சை அறிமுகம் செய்துள்ளது.;
இரவில் மட்டுமே எரியும் வகையில் விளக்குகளை ஆன் செய்யும் விதத்திலும், ஆட்கள் நடமாட்டம் உள்ளபோது மட்டும் விளக்குகள் எரியும் வகையிலும் இந்த சுவிட்ச் செயல்படும். இதில் உணர் கருவி உள்ளது.
இதனால் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இந்த உணர் கருவி சுவிட்சை பயன்படுத்தினால் விளக்குகள் அணைந்துவிடும். ஆள் நடமாட்டம் இருந்தால் விளக்குள் எரியும். எத்தகைய விளக்குகளுக்கும் இதை சுவிட்சாக பயன்படுத்தலாம். இதனால் மின்சாரம் மிச்சமாகும். இதன் விலை ரூ.526.