ஏரிகளின் பாதுகாக்கப்பட்ட பகுதி அதிகரிப்பு ரத்து: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பரமேஸ்வர் வரவேற்பு

ஏரிகளின் பாதுகாக்கப்பட்ட பகுதி அதிகரிப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் வரவேற்றுள்ளார்.

Update: 2019-03-05 22:00 GMT
பெங்களூரு, 

ஏரிகளின் பாதுகாக்கப்பட்ட பகுதி அதிகரிப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாதுகாக்கப்பட்ட பகுதி

பெங்களூருவில் மட்டும் ஏரிகளின் பாதுகாக்கப்பட்ட பகுதியை 75 மீட்டராக அதிகரித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால் நாட்டின் பிற நகரங்களில் ஏரிகளின் பாதுகாக்கப்பட்ட பகுதி 15-ல் இருந்து 35 மீட்டர் வரை மட்டுமே உள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி நகரில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களை இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அந்த தீர்ப்பை எதிா்த்து சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

சுத்திகரிப்பு மையங்கள்

சுப்ரீம் கோர்ட்டு, கர்நாடக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து உள்ளது. இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் அதுபற்றி முழுமையாக ஆய்வு செய்யப்படும். வர்த்தூர் ஏரியில் மீண்டும் வெள்ளை நுரை உருவாகி பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்க வேண்டும் என்பதை அரசு வலியுறுத்தியுள்ளது. அந்த ஏரியில் வெள்ளை நுரை உருவாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சுட்டுக்கொல்ல வேண்டும்

பிரதமர் மோடியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பேளூர் கோபாலகிருஷ்ணா கூறி இருப்பது சரியல்ல. அவ்வாறு பேசுவது தவறு.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

மேலும் செய்திகள்