குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் கேட்டு புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே உள்ள ஏநத்தம்பண்ணை ஊராட்சியில் பாலாநகர், கல்யாணம் சுந்தரம் தெரு உள்ளது. இங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும் இந்த தெருவில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள், புதுக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சாலையையும் சீரமைத்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகையிட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.