சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா 4 கால பூஜைகளுடன் நடந்தது

பெரம்பலூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி விழா 4 கால பூஜைகளுடன் நடைபெற்றது.

Update: 2019-03-05 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேசுவரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா விடியவிடிய விமரிசை யாக நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு நேற்று முன்தினம் இரவு வாசனை திரவியங்கள், பால் பொருட்கள், இளநீர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தினசரி வழிபாட்டுகுழுவினர், வாரவழிபாட்டு குழுவினர் மற்றும் சிவனடியார்கள் திரளானார் கலந்து கொண்டு, திருக்கடைக்காப்பு, திருப்பாட்டு, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிருதிருமுறைகளையும், சிவபுராணத்தையும் பாராயணம் செய்தனர். மகா சிவராத்திரியையொட்டி நடந்த 4 கால பூஜைகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் மணி உள்பட பலர் செய்திருந்தனர்.

குரும்பலூர்

இதேபோல் பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதர்மசம்வர்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு 4 கால யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் குரும்பலூர், ஈச்சம்பட்டி, பாளையம், செஞ்சேரி, கீழக்கணவாய், புதூர், மேட்டாங்காடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

எளம்பலூர்

பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் பிரம்மரிஷிமலை அடிவாரத்தில் உள்ள நளினாம்பிகை உடனுறை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நேற்று முன்தினம் இரவு கோபூஜை, அஸ்வ பூஜை, ருத்ரபூஜையுடன் தொடங்கியது. அதே நேரத்தில் மலைஉச்சியில் அதிர்வேட்டுக்கள், வாணவேடிக்கைகள் முழங்க 2 மகாதீபங்கள் ஏற்றப்பட்டு 210 சித்தர்கள் கலந்துகொண்ட வேள்வியும் நடந்தது.

இதனை தொடர்ந்து காகன்னை ஈஸ்வரர் கோவிலில் ருத்ரஜெபம், ருத்ரவேள்விகள், பன்னிரு திருமுறைகள், சிவபுராண பாராயணத்துடன் நடந்தது. பூரண கும்பம் வைக்கப்பட்டு கலசவழிபாடும், 108 சங்காபிஷேகமும், ஒவ்வொரு கால யாகசாலை பூஜை முடிவடைந்த உடன் மூலவருக்கு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்தர் மடங்களில்...

மேலும் வடக்குமாதவி சாலையில் சமத்துவபுரம் அருகே உள்ள மகாலிங்க சித்தர் சுவாமிகள் அதிஷ்டானத்திலும், பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் சுவாமிகளின் மடத்திலும் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு ருத்ரவேள்விகள், ருத்ரஜெபவழிபாடுஆகியவை இரவு முழுவதும் நடந்தது. 

மேலும் செய்திகள்