புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தஞ்சையில் முத்தரையர்கள் ஆர்ப்பாட்டம்

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தஞ்சையில் முத்தரையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-05 23:00 GMT
தஞ்சாவூர்,


தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில இளைஞரணி செயலாளர் ராஜலிங்கம் தலைமை தாங்கினார். கோவிந்தராஜன் வரவேற்றார்.

புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் புஷ்பராஜ், நாகை மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி கருணாகரன், ஒன்றிய துணை செயலாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் மாமன்னன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு தஞ்சையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். முத்தரையருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும். விவசாயகடன், கல்விக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். முத்தரையருக்கு 5 எம்.பி.க்கள் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவோம் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அம்பலத்தரசுராமலிங்கம், பொதுச்செயலாளர் குப்புசாமி, பொருளாளர் சுப்பிரமணியன், அரசியல் அணி செயலாளர் சந்திரபிரகாசம், துணைத்தலைவர் சிதம்பரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலாயுதம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்