மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6.16 கோடி கடன் உதவி முதல்–அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6 கோடியே 16 லட்சம் கடன் உதவியை முதல்–அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

Update: 2019-03-05 00:15 GMT

வில்லியனூர்,

புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம் வில்லியனூர், அரியாங்குப்பம் வட்டாரங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு, 236 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் தொடக்க நிதி, சுழல்நிதி, சமுதாய மூலதன நிதியாக மொத்தம் ரூ.6 கோடியே 16 லட்சத்து 70 ஆயிரம் கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் தனவேல், அனந்தராமன், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் தர்சம் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் ரவி பிரகாஷ், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் வீரராகவன், வங்கி முன்னோடி மேலாளர் சந்திரசேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி மோகன்குமார், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் உமா குருமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி செலினா வரவேற்றார். முடிவில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி மலர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்