சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.47 லட்சம் மோசடி செய்தவர் கைது

சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.47 லட்சம் மோசடி செய்தவரை குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-04 22:33 GMT

சிவகங்கை,

காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 51). இவர் தனக்கு சிங்கப்பூரில் ஓட்டல் உள்ளதாகவும், அதற்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் கூறிவந்தாராம்.

இதை நம்பிய திருச்சி கன்டோன்ட்மெண்ட் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (59) என்பவர் கடந்த 2018–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 35 பேர்களை சிங்கப்பூருக்கு அனுப்புவதற்காக ரூ.47 லட்சத்தை பல்வேறு தவணைகளில் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட ராமசாமி பேசியபடி சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்பவில்லையாம். மேலும் வாங்கிய பணத்தையும் அவர் திருப்பித்தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தியாகராஜன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரனிடம் புகார் செய்தார். அதில் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ராமசாமி, ரூ.47 லட்சம் மோசடி செய்துள்ளார் என்று கூறியிருந்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், மாவட்ட குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லிராணி, சப்–இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி ஆகியோர் விசாரணை நடத்தி ராமசாமியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்