சீர்காழி, செம்பனார்கோவில் ஒன்றிய அலுவலகங்களில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சீர்காழி, செம்பனார்கோவில் ஒன்றிய அலுவலகங்களில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சீர்காழி,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று 2-வது நாளாக சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் தமிழக அரசு தற்போது அறிவித்த ஏழை, எளிய மக்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பணி, பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள், தனி நபர் கழிவறை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருண் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள், இங்கிருந்து தஞ்சைக்கு பணி மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஒன்றிய ஆணையரும், சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினருமான தியாகராஜன், மாவட்ட இணை செயலாளர் நல்லத்தம்பி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்.ராஜேந்திரன் உள்ளிட்ட 57 ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த உள்ளிருப்பு போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.