ரெயில்வேயில் 35,277 பணியிடங்கள்
ரெயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்பம் சாராத பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 35 ஆயிரத்து 277 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.;
மத்திய ரெயில்வே துறை உலகில் அதிகமானவர்களை கொண்டு செயல்படும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். சமீபத்தில் ரெயில்வேயில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு சுமார் 30 ஆயிரம் இடங்கள் என ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தொழில்நுட்பம் சாராத பணிகள்
தற்போது தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கான முழுமையான காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மொத்தம் 35 ஆயிரத்து 277 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பணி வாரியாக காலியிட விவரம் : ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 4 ஆயிரத்து 319 இடங்கள், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 760 இடங்கள், ஜூனியர் டைம் கீப்பர் பணிக்கு 17 இடங்கள், டிரெயின்ஸ் கிளார்க் பணிக்கு 592 இடங்கள், கமர்சியல் கம் டிக்கெட் கிளார்க் பணிக்கு 4 ஆயிரத்து 940 இடங்கள் உள்ளன. இவை பட்டப்படிப்புக்கு கீழான கல்வித்தகுதி கொண்ட பணியிடங்களாகும்.
இவை தவிர டிராபிக் அசிஸ்டன்ட் பணி - 88 இடங்கள், கூட்ஸ் கார்டு பணிக்கு 5 ஆயிரத்து 748 இடங்கள், சீனியர் கமர்சியல் கம் டிக்கெட் கிளார்க் பணிக்கு 5 ஆயிரத்து 638 இடங்கள், சீனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 2 ஆயிரத்து 873 இடங்கள், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 3 ஆயிரத்து 164 இடங்கள், சீனியர் டைம் கீப்பர் 14 இடங்கள், ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு 6 ஆயிரத்து 865 இடங்கள், கமர்சியல் அப்ரண்டிஸ் 259 இடங்கள் உள்ளன. இவை பட்டதாரிகளுக்கான பணியிடங்களாகும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்...
வயது வரம்பு
பட்டதாரிகள் தரத்திலான பணியிடங்களுக்கு 33 வயதுக்கு உட்பட்டவர்களும், பிளஸ்-2 தரத்திலான பணியிடங்களுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். 1-7-2019-ந் தேதியை அடிப் படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு கணக்கிடப்படும்.
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பிளஸ் 2 படிப்புடன், தட்டச்சு தெரிந்தவர்கள், கமர்சியல் டிக்கெட் கிளார்க், டிரெயின்ஸ் கிளார்க், ஜூனியர் டைம் கீப்பர், ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பு படித்தவர்கள் டிராபிக் அசிஸ்டன்ட், கூட்ஸ் கார்டு, சீனியர் கமர்சியல் கம் டிக்கெட் கிளார்க், கமர்சியல் அப்ரண்டிஸ், ஸ்டேசன் மாஸ்டர் பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன், தட்டச்சு படித்தவர்கள் ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் கம் டைப்பிஸ்ட், சீனியர் டைம் கீப்பர், சீனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் , சிறுபான்மையினர் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். ஏப்ரல் 5-ந் தேதி வரை கட்டணம் செலுத்தலாம். முதல் நிலை கணினித் தேர்வு ஜூன் முதல் செப்டம்பா் மாத இடைவெளிக்குள் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை http://www.rrcb.gov.in/rrbs.html என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.