கடற்படையில் 554 பணியிடங்கள் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கடற்படையில் டிரேட்ஸ்மேன் மேட் பணி களுக்கு 554 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Update: 2019-03-04 11:25 GMT
இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான கடற்படை, நாட்டின் கடல்எல்லை பாதுகாப்பில் ஈடு படுகிறது. இந்த படைப்பிரிவில் தகுதியான இளைஞர்கள் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். தற்போது ‘குரூப்-சி’ பிரிவு அலுவலக பணியிடங்களான டிரேட்ஸ்மேன் மேட் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 554 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படை கமாண்டிங் அலுவலகத்திற்கு 46 இடங்களும், மும்பையை தலைமையிடமாக கொண்ட மேற்கு கடற்படை கமாண்டிங் தலைமையகத்திற்கு உட்பட்ட அலுவலகங்களுக்கு 502 பேரும், கொச்சி தெற்கு கமாண்டிங் அலுவலகத்தில் 6 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 15-3-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

10-ம் வகுப்பு தோ்ச்சி பெற்று, குறிப்பிட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்து சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் இன்றி விண்ணப்பிக்கலாம். இவர்கள் தவிா்த்த மற்றவர்கள் ரூ.205 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

அதிகப்படியான விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்குப் பின்பு பணி நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற மாா்ச் 15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தொிந்து கொள்ளவும்.  www.joinindiannavy.gov.in, www.indiannavy.nic.in ஆகிய இணையதள பக்கங்களைப் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்