சாலையை புதிதாக அமைக்க நிதி ஒதுக்கீடு அமைச்சர்- கலெக்டருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

சாலைகள் பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக மாறி பயன்படுத்த முடியாமல் மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்தசாலையை புதிதாக அமைக்க நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Update: 2019-03-03 22:30 GMT
கிருஷ்ணராயபுரம்,

பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட லட்சுமணம்பட்டிபூவம்பாடி வரையில் 4 கிலோ மீட்டர் சாலையும், சேங்கல் ஊராட்சிக்குட்பட்ட பூவம்பாடி, சின்னசேங்கல் வரையில் 1 கிலோ மீட்டர் சாலையும் சேர்த்து மொத்தம் 5 கிலோ மீட்டர் வரையிலான இந்த தார்சாலை 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலைகள் பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக மாறி பயன்படுத்த முடியாமல் மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்தசாலையை புதிதாக அமைக்க நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பல ஆண்டு கோரிக்கையை ஏற்று சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா, மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பூவம்பாடி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் மக்கள் நேற்று தபால்கள் அனுப்பினர். 

மேலும் செய்திகள்