மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: விருதுநகரில் இருந்து கூடுதல் வாக்கு பதிவு எந்திரங்கள் வந்தன

நாடாளுமன்ற தேர்தலுடன், மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் சிவகங்கை மாவட்டத்திற்கு கூடுதல் வாக்கு பதிவு எந்திரங்கள் விருதுநகரில் இருந்து கொண்டு வரப்பட்டன.

Update: 2019-03-03 22:15 GMT

சிவகங்கை,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பயன்படுத்துவற்காக ஏற்கனவே பெங்களூருவில் இருந்து 1,800 கட்டுபாட்டு எந்திரங்கள், 1,800 வாக்கை உறுதிபடுத்தும் எந்திரங்கள் மற்றும் 3 ஆயிரத்து 310 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டு சிவகங்கையில் பாதுகாப்பா வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள மானாமதுரை சட்டமன்ற (தனி) தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் வாய்ப்பு உள்ளதால் கூடுதலாக மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் தேவைபடுகின்றன.

எனவே விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கூடுதலாக 300 கட்டுபாட்டு எந்திரங்கள், 300 வாக்குகளை உறுதிபடுத்தும் எந்திரங்கள் மற்றும் 600 வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

இவைகளை தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ், காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு ஆகியோர் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக இறக்கி வைத்தனர். மேலும் கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலையில் அந்த அறையை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்