பெரம்பலூர், அரியலூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் உதவி கலெக்டர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப 2019-ம் ஆண்டு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

Update: 2019-03-03 22:45 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் உதவி கலெக்டர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப 2019-ம் ஆண்டு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 2,232 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். முதல் நிலைத்தேர்வு எழுதுவதற்காக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த இந்த தேர்வில் மொத்தம் 1,653 பேர் கலந்து கொண்டு எழுதினர். 579 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ராஜராஜன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வுக்கு மொத்தம் 1,980 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1,558 பேர் தேர்வு எழுத வந்தனர். 422 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேலும் செய்திகள்