ரூ.9¼ கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் : 2 பேர் கைது

மும்பையில்ரூ.9¼ கோடி செம்மரக்கட்டைகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-03-02 23:42 GMT
மும்பை,

மும்பை அந்தேரி வீர் தேசாய் ரோடு வழியாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக அம்போலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வனத்துறையினருடன் அசானிஷாம் நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை வழிமறித்த போலீசார் அதில் சோதனை நடத்தினர்.அந்த வேனில் இருந்து 500 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்தி சென்ற அஜாஸ் செய்யது (வயது31), சுபியான் சேக் (19) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் குர்லாவில் உள்ள குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1,345 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் ஆன செம்மரக்கட்டைகளின் மொத்த மதிப்பு ரூ. 9 கோடியே 22 லட்சம் ஆகும்.

விசாரணையில், கைதான 2 பேரும் செம்மரக்கட்டைகளை விமானம் மூலமாக துபாய்க்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்