“பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தது கவலை அளிக்கிறது” - பி.ஆர்.பாண்டியன் பேட்டி
“விவசாயிகளை புறக்கணித்த பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தது கவலை அளிக்கிறது“ என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
நெல்லை,
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ‘நாடாளுமன்ற தேர்தல் பிரச்சினைகளும், தீர்வுகளும்‘ என்ற தலைப்பில் பிரசார பயணத்தை நேற்று முன்தினம் முல்லை பெரியாறு அணையில் இருந்து தொடங்கினார். அவர் நேற்று காலை நெல்லைக்கு வந்தார். நெல்லை வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் பிரசாரம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளின் 46 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரசார பயணம் நடக்கிறது. மத்தியில் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் பா.ஜனதா விவசாயிகளை புறக்கணித்து விட்டது. குறிப்பாக தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
முல்லை பெரியாறு அணை, காவிரி பிரச்சினை, கஜா புயல் நிவாரணம் உள்ளிட்டவற்றில் தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது. இதை தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க. நாடாளுமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் சுட்டிக்காட்டி உள்ளது. இப்போது விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இது இந்திய அளவில் 1 கோடி பேருக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு தான் கிடைக்கும் நிலை உள்ளது. இது ஏமாற்று வேலை.
இந்த நிலையில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு கவலை அளிக்கிறது. தற்போது நாங்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். இந்த பிரசாரம் வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூரில் நிறைவு பெறுகிறது. அங்கு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் எங்களது தேர்தல் நிலைப்பாட்டை தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, பொதுச்செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ஸ்ரீதர், நெல்லை மாவட்ட தலைவர் செல்லத்துரை உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர். பின்னர் பிரசார குழுவினர் குமரி மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர்.