திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் ரூ.48 கோடி செலவில் தூண்டில் பாலம் அமைக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் ரூ.48 கோடி செலவில் தூண்டில் பாலம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரை அடுத்த ஆலந்தலை வடக்கு தெரு, தெற்கு தெரு, அமலிநகர் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.50 லட்சம் செலவில் சிமெண்டு தள கற்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும் ஆலந்தலையில் ரூ.50 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம், ரூ.20 லட்சம் செலவில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரூ.15 லட்சம் செலவில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, ரூ.18 லட்சம் செலவில் 2 இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது.
உடன்குடி அனல்மின் நிலைய சி.எஸ்.ஆர். நிதி திட்டத்தில் அமைக்கப்படவுள்ள இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, ஆலந்தலையில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரும், அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கல்வெட்டை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், ஆலந்தலையில் ரூ.48 கோடி செலவில் தூண்டில் பாலம் அமைக்கப்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார்.
விழாவில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏக்கள் சின்னப்பன் மோகன் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.