நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரி 5-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 5-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
தேனி,
தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 5-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் ஜவஹர், கல்லூரி இணைச்செயலாளர் காசிபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம் வரவேற்றார்.
திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வர் சுதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். இதில் 155 இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் மாணவ, மாணவிகள் பட்டங்களை பெற்றனர். விழாவில் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர்கள் மாதவன், சிவகணேசன், தேர்வு கட்டுப்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர்கள் பிரதாப், சுருளிமணி ஆகியோர் செய்திருந்தனர்.