வில்லியனூர் அருகே பரபரப்பு சம்பவம்: மனைவியை நண்பர்களை ஏவி கொலை செய்தது அம்பலம் போலீசிடம் தப்பிக்க வீட்டில் தூங்கியதுபோல் நடித்த டிரைவர் கைது
வில்லியனூர் அருகே பெண் கொலையில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார். நண்பர்களை ஏவி கொலை செய்து விட்டு அதில் இருந்து தப்பிக்க வீட்டில் தூங்கியது போல் நடித்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
வில்லியனூர்,
புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த மடுகரை கம்பத்தான் வீதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 31), டிரைவர். இவரது மனைவி கங்கா (வயது 27). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலையில் கங்கா வீட்டின் அருகில் பால் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள், கங்காவை மடக்கி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பினர். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜசேகருக்கு இதுபற்றி தகவல் தெரியவந்தது.
சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த அவர் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை குறித்து நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் மடுகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் ராஜசேகர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரித்ததில் நடத்தையில் சந்தேகப்பட்டு கங்காவை அவர் கொலை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் ராஜசேகர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்த கங்காவுக்கும், பக்கத்து ஊரான சொர்ணாவூரை சேர்ந்த எனக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
நான் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கு செல்ல வேண்டி இருந்தது. இந்தநிலையில் ஆண்கள் சிலருடன் கங்கா தொடர்பு வைத்து இருந்தது தெரியவந்தது. நான் அதிர்ச்சி அடைந்து அவளை கண்டித்தேன். ஆனாலும் அவள் தொடர்பை விடவில்லை.
அதனால் விவாகரத்து செய்ய முடிவு செய்து விழுப்புரம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தோம். இந்த வழக்கில் நானும், கங்காவும் கோர்ட்டில் விசாரணைக்கு சரியாக ஆஜராகாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து சொர்ணாவூரில் இருந்து கங்கா புதுவை மடுகரை பகுதியில் குழந்தைகளுடன் குடியேறினார். இதை அறிந்த நான், கங்காவிடம் இனிமேல் நாம் சேர்ந்து வாழலாம் என்று கூறினேன். இதனை அவர் ஏற்றுக்கொண்டதால் நாங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். அதன் பிறகும் கங்காவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை.
அந்த பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கங்கா வேலைக்கு சேர்ந்தார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் இரவு நேரத்தில் யாருடனோ செல்போனில் சிரித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவமானம் அடைந்து என்னால் வெளியில் தலைகாட்டவே முடியவில்லை.
இதுபற்றி எனது நண்பர்களுடன் சொல்லி அழுதேன். அப்போது கங்காவை கொலை செய்ய உதவுமாறு கேட்டேன். அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்ததைத்தொடர்ந்து பால் வாங்க செல்லும் நேரத்தை தேர்ந்தெடுத்து கங்காவை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலையில் என்னுடைய நண்பர்கள் வந்து என் வீட்டின் அருகில் பதுங்கி இருந்தனர்.
வழக்கம்போல் கங்கா பால் வாங்குவதற்கு சொசைட்டிக்கு சென்றார். இதை பார்த்த என்னுடைய நண்பர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றனர். பால் வாங்கிக் கொண்டு திரும்பியபோது கங்காவை கொலை செய்து விட்டு அவர்கள் தப்பினர்.
இதுபற்றி எதுவுமே தெரியாததுபோல் நான் என்னுடைய குழந்தைகளுடன் வீட்டில் தூக்கிக்கொண்டு இருந்தேன். சிறிது நேரத்தில் என் மனைவி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு சென்று மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதேன். போலீசில் இருந்து தப்பிக்க சம்பவம் நடந்த போது வீட்டில் தூங்குவது போல் நடித்தேன். ஆனால் போலீசார் கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த கொலை தொடர்பாக ராஜசேகரின் நண்பர்கள் 8 பேரை போலீசார் தேடி வந்தனர். இவர்களில் கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த அருள் பிரகாஷ் உள்பட சிலர் போலீசாரின் பிடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.