தர்மபுரி அரசு பணிமனைகளில் போக்குவரத்து துறை முதன்மை செயலர் நேரில் ஆய்வு

தர்மபுரி அரசு பணிமனைகளில் போக்குவரத்து துறை முதன்மை செயலர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2019-03-02 22:45 GMT
தர்மபுரி,

தமிழக அரசின் போக்குவரத்து துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தர்மபுரி பகுதிகளில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது பணிமனைகளில் அரசு பஸ்களின் பராமரிப்பு முறை, விபத்துகளை தடுக்க டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள், தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். போக்குவரத்து துறை அலுவலர்கள், தொழிலாளர்களின் பணிகள், டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழிலாளர்களின் துறைசார்ந்த கோரிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். போக்குவரத்து அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள பதிவேடுகள், ஆவணங்களை பார்வையிட்டார். பொதுமக்களுக்கு சிறந்த போக்குவரத்தை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும். சிறந்த பணிசூழலை உருவாக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தொழிலாளர்களிடம் அப்போது அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பொதுமேலாளர் லாரன்சு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்