நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் சரிவு 435 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் சரிவடைந்து 435 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-03-02 23:00 GMT
நாமக்கல், 

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 15 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக சரிவடைந்து உள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:-

சென்னை-460, ஐதராபாத்-400, விஜயவாடா, தனுகு-422, பார்வாலா-396, மும்பை-460, மைசூரு-452, பெங்களூரு-435, கொல்கத்தா-474, டெல்லி-427.

கறிக்கோழி கிலோ ரூ.65-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.59-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை குறைந்து வருவதால் அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் முட்டை நுகர்வு பொதுமக்கள் இடையே குறைந்து வருகிறது. இதுவும் முட்டை விலை குறைய ஒரு காரணம் என கூறப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் 4 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்