இந்தியா-பாகிஸ்தான் போரை காரணம் காட்டி நாடாளுமன்ற தேர்தல் ரத்தாகும் வாய்ப்பு: தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டி
இந்தியா-பாகிஸ்தான் போரை காரணம் காட்டி நாடாளுமன்ற தேர்தல் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக தங்க.தமிழ்ச்செல்வன் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ஜோதி, பொருளாளர் விருத்தாசலம், இணை செயலாளர் கலைவாணி, துணை செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜான் என்ற ஆன்டனிசாமி வரவேற்றார்.
கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், பொருளாளர் ரெங்கசாமி, வக்கீல் பிரிவு செயலாளர் வேலுகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் தங்க.தமிழ்ச்செல்வன் பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல்களில் மாநில கட்சிகள், தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்தித்துள்ளன. ஆனால் ஜெயலலிதா தான் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து 40 தொகுதியிலும் போட்டியிட்டு 37 தொகுதியில் வெற்றி பெற்றார்.
அதேபோல் இந்த தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், மாநில கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைத்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் போட்டியிடுகிறது.
அ.தி.மு.க., பா.ஜ.க. மீது மக்களுக்கு வெறுப்பு உள்ளது. இதனால் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். அதேபோல் ஸ்டாலினுக்கு கட்சியை நடத்தும் திறமை இல்லை. இந்த தேர்தலில் தி.மு.க.வும் தோல்வியை சந்திக்கும். 40 இடங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வெற்றி பெறும். அப்போது நாம் சொல்பவர்தான் பிரதமர் ஆவார்.
அப்போதுதான் மாநில உரிமைகளான கச்சத்தீவு மீட்கப்படும், காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் படும். ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப்பின்னர் தலைவர் பதவிக்கு வெற்றிடம் உள்ளது. அதற்கு தகுதியானவர் டி.டி.வி.தினகரன் தான். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பேச்சாளர் வடுகை.ராஜேந்திரன், செய்தி தொடர்பாளர் அதிவீரராமபாண்டியன், வக்கீல் பிரிவு இணை செயலாளர் தங்கப்பன், பொதுக்குழு உறுப்பினர் இந்திரா வேலாயுதம், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்வேலன், கோவி.மனோகரன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தனசேகரன், அமைப்புசாரா ஒட்டுனர் அணி செயலாளர் ரெங்கப்பா, மகளிரணி செயலாளர் கண்ணுக்கினியாள் மற்றும் பகுதி மாவட்ட, மாநகர, ஒன்றிய நகர செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஜெயலலிதா பேரவை தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
பின்னர் தங்க.தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், “இந்தியா- பாகிஸ்தான் போரை மையமாக வைத்து நாடாளுமன்ற தேர்தலை நிறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு, தேர்தல் ஆணையம் இதனை தெளிவுபடுத்த வேண்டும். குக்கர் மட்டுமல்ல எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் அமோக வெற்றி பெறும். மாநில கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தாலும் ஆர்.கே.நகரை போல தோல்விதான் கிடைக்கும்” என்றார்.