4 பேர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி கொள்முதல் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - 409 நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன
4 பேர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி கொள்முதல் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் 409 நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் 409 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் முறைகேடு நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பேரில் சடையார்கோவில், பனையக்கோட்டை, வாண்டையார் இருப்பு ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடைபெற்றதாக கூறி 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை கண்டித்தும், 4 பேரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய கோரியும், அமைச்சர், அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என பணியாளர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும், இதுவரை வசூல் செய்த பணத்தை பணியாளர்களிடம் திரும்ப வழங்க வலியுறுத்தியும் நெல் கொள்முதல் பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 409 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன. பின்னர் பணியாளர்கள் அனைவரும் தஞ்சையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது குறித்து பணியாளர்கள் கூறும்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டைகளை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தேவையின்றி பணியாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அவர்களை பணியிடை நீக்கம் நடவடிக்கை மேற்கொள்வதை கைவிட வேண்டும். நெல் மூட்டைகள் வெயிலில் காய்வதால் எடை குறைய வாய்ப்பு உள்ளது. அப்படி குறையும் எடைக்கு பணியாளர்களிடம் பிடித்தம் செய்வதையும் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றனர்.