விளாங்குடி வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடக்கம்

விளாங்குடி வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

Update: 2019-03-01 23:00 GMT
வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம் அரியலூர் ஒன்றியம் பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதாரம், மருதையாறு வடிநிலக்கோட்டம்) சார்பில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் விளாங்குடி வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பின்னர் கலெக்டர் விஜயலட்சுமி, அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் ஆகியோர் பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்தனர்.

இதேபோல் சுண்டக்குடி கிராமத்தில் ஆண்டிப்பட்டாக்காடு மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி, மணக்குடையான் கிராமத்தில் அருகில் ஆணைவாரி ஓடையில் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி, ரெட்டிபாளையம் கிராமத்திலுள்ள உப்போடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி, கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கல்லார் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி, ரெட்டிபாளையம் கிராமத்திலுள்ள உப்போடை, புதுஏரி மற்றும் அதன் கீழ் உள்ள ஏரிகளையும் புனரமைக்கும் பணி உள்ளிட்ட அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காக மொத்தம் ரூ.14 கோடி மதிப்பில் பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது.

இதில் செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம், மருதையாறு வடிநிலக்கோட்டம்) தட்சிணாமூர்த்தி, பொறி யாளர் வேல்முருகன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பில் கல்லங்குறிச்சி, ராயம்புரம், ரெட்டிப்பாளையம் மற்றும் சிலப்பனூர் ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்பத்துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், கிராம சுகாதார செவிலியர் குடியிருப்பு கட்டிடங்களை கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, மற்றும் சுகாதாரப்பணி யாளர், செவிலியர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்