நாட்டுப்படகுகளில் கச்சத்தீவு திருவிழா செல்ல அனுமதி

நாட்டுப்படகுகளில் கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக திருவிழா ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-03-01 22:45 GMT

ராமேசுவரம்,

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற 15,16–ந்தேதிகளில் நடக்கிறது. இந்த திருவிழாவுக்கு ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகள் மூலம் ஏராளமா பக்தர்கள் சென்று வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கச்சத்தீவு திருவிழா குழு செய்துவருகிறது. 63 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் செல்ல பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பாரம்பரிய மீனவர் சங்கம் மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்கத்தின் சார்பில் சின்னத்தம்பி, அருள், சயாகம் உள்பட ஒருங்கிணைப்பு குழுவினர் மாவட்ட கலெக்டரிடம் கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகுகளில் செல்ல அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 4 ஆண்டுகளாக நாட்டுபடகுகள் அனுமதிக்கப்படாத நிலையில் பாதுகாப்பாக பக்தர்களை அழைத்துச்செல்வதாக ஒருங்கிணைப்புகுழு உறுதி அளித்ததைதொடர்ந்து 16 நாட்டுப்படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த படகுகள் முழுமையான ஆய்வுக்கு பிறகு அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தலா ஒரு படகில் 18 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்காக பக்தர்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக கச்சத்தீவு திருவிழா நாட்டுப்படகு ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்