அரசு நிலத்தில் மண் அள்ள எதிர்ப்பு லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
அரசு நிலத்தில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவை சேர்ந்த கண்ணங்கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நீர்த்தேக்கத்திற்கும், கிருஷ்ணா கால்வாய்க்கும் இடையே கால்வாய் அமைக்கும் பணிக்காக அருகே உள்ள கரடிப்புத்தூர் கிராமத்தில் சுமார் 30 அடி ஆழத்திற்கு குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரம் வரை சவுடு மண் வெட்டி எடுக்கப்பட்டது. அவ்வாறு கால்வாய் பணிக்காக வெட்டி எடுக்கப்பட்ட உபரி சவுடு மண், தற்போது மேற்கண்ட கால்வாயின் ஓரமாக குவியலாக குவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட மண்ணை அந்த இடத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையாக பொதுப் பணித்துறை சார்பில் மொத்தம் 4 ஆயிரத்து 763 லோடு சவுடுமண் எடுத்திட தனியாருக்கு குவாரி விடப்பட்டு உள்ளது. மேற்கண்ட குவாரி வருகிற 10-ந்தேதி முடிவடைகிறது. மேலும் அவ்வாறு குவிக்கப்பட்ட உபரி சவுடு மண்ணை தவிர கண்டிப்பாக வேறு எங்கும் மண் அள்ளக்கூடாது. மேலும் மண் அள்ளுவதற்காக பூமியில் எந்த வித பள்ளமும் அமைத்திடக்கூடாது என விதிமுறைகளும் இதற்காக வகுக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் மேற்கண்ட உபரி சவுடு மணலை தவிர அருகே உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் அத்துமீறி பள்ளம் அமைத்து அங்கிருந்து மண் எடுப்பதாக புகார் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து கரடிப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மேற்கண்ட இடத்தில் திரண்டு அங்கு இருந்த மணல் அள்ளும் எந்திரத்தையும், லாரிகளையும் சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து பாதிரிவேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா, கிராம நிர்வாக அதிகாரி நவீன்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அரசு நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவது குறித்து ஏற்கனவே வருவாய்த்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு 3 முறை புகார் அனுப்பப்பட்டு உள்ளதாக கிராம நிர்வாக அதிகாரி நவீன்குமார் தெரிவித்தார்.