திட்டக்குடியில் இளம்பெண்களை வைத்து விபசாரம் - 2 பேர் கைது

திட்டக்குடியில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-28 22:00 GMT
திட்டக்குடி,

திட்டக்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருமஞ்சனவீதியை சேர்ந்த முருகன்(வயது 52) என்பவருடைய வீட்டில் சோதனை செய்தபோது, 22 வயது மதிக் கத்தக்க 2 இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது. அப்போது வீட்டில் இருந்த முருகன் மற்றும் அவரது மகள் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் மருதாயி (38), காசி மகன் பிரசாத்(27) என்பதும், முருகனுக்கு அவர்கள் இருவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து முருகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரசாத், மருதாயி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகன், அவரது மகள் ஆகியோரை தேடி வருகின்றனர். விபசாரத்தில் ஈடுபட்ட 2 இளம்பெண்களையும் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்