சேவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

சேவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

Update: 2019-02-27 22:00 GMT
ஆரணி, 

ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் மாணவர் மறைந்த எம்.ஏ.பன்னீர்செல்வம் நினைவாக அவரது மகனும் தொழில் அதிபருமான எம்.ஏ.பி.சீனிவாசன் ரூ.4½ லட்சத்தில் மாவட்ட கல்வித்துறை மூலமாக ஒப்புதல் பெற்று ஸ்மார்ட் வகுப்பை கட்டினார்.

அதன் திறப்பு விழா கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் இல.மைதிலி, ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் த.சம்பத், வட்டார கல்வி அலுவலர்கள் துரையரசன், கமலக்கண்ணன், தலைமை ஆசிரியை து.வேளாங்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்பறையை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் ஸ்மார்ட் வகுப்பை தொடங்கி வைத்தார்.

விழாவில் நன்கொடையாளரும் தொழில் அதிபருமான எம்.ஏ.பி.சீனிவாசன், சரஸ்வதிபன்னீர்செல்வம், தொழில் அதிபர் வாழப்பந்தல் தனசேகர், எம்.ஏ.சம்பத், காஞ்சீபுரம் தொழில் அதிபர் எ.செந்தில்குமார் ஆகியோர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்தனர்.

இதில் சேவூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பி.கே.பெருமாள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, கூட்டுறவு சங்க தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, ஜி.வி.கஜேந்திரன், சங்கரிபாலசந்தர், அ.கோவிந்தராசன், ஜூவல்லரி அதிபர்கள் பன்னாலால், ரிக்கிப்சந்த், பிரித்திவிராஜ், தொழில் அதிபர்கள் முசபர்அகமத், கே.சங்கர், ஜெயப்பிரகாஷ், பி.செல்வராஜ், மசாலா குமார், பி.சவுந்தர்ராஜன், ஜி.மகேஷ், எம்.ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள், அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்