அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையம் நாராயணசாமி திறந்து வைத்தார்

காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் கருணாநிதி பட்ட மேற்படிப்பு மையத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார்.

Update: 2019-02-27 22:30 GMT
காரைக்கால்,

காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெயரில் பட்டமேற்படிப்பு மையம் புதிதாக அமைக்கப்பட்டுள் ளது. இந்த மையத்தின் முகப்பில் அவரது உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவுக்கு அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி, பாரதி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிவா, கீதா ஆனந்தன், முன்னாள் அமைச்சர் நாஜிம், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருணாநிதி பட்டமேற்படிப்பு மையம் மற்றும் உருவ சிலையை முதல்- அமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார்.

அப்போது அவர் பேசிய தாவது:-

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 2 சாலைகளுக்கும், அண்ணா அரசு கல்லூரியில் பட்டமேற்படிப்பு மையத்துக்கும் மறைந்த முன்னாள் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்டவும், சிலை அமைக்கவும், புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சித் துறையில் இருக்கை அமைக்கவும் உறுதி அளித்திருந்தேன்.

அதன்படி தற்போது கருணாநிதி பெயரில் பட்டமேற்படிப்பு மையம் மற்றும் சிலை திறக்கப்பட்டு உள்ளது. விரைவில் மற்ற பணிகளையும் செய்து முடிப்பேன். ராகுல்காந்தி பிரதமர் ஆவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். மிக விரைவில் அது நிறைவேறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தமிழக முன்னாள் எம்.பி. விஜயன், புதுச்சேரி உயர் கல்வித்துறை இயக்குனர் யாசிம்லட்சுமி நாராயணரெட்டி, அபி விருத்தி ஆணையர் அன்பரசு, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், என்ஜினீயர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்