திருவாரூரில் இருந்து ஈரோட்டிற்கு அரவைக்காக 960 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூரில் இருந்து ஈரோட்டிற்கு அரவைக்காக 960 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-02-27 22:15 GMT
திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. மாவட்டம் முழுவதும் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் அந்தந்த பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் மூட்டைகள் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் கூடுதலான நெல் மூட்டைகள் பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திருவாரூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலைத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 21 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 960 டன் நெல் ஈரோடு மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்