பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடந்தது
மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் அகில இந்திய தபால் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மயிலாடுதுறை கோட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் கலையரசன் முன்னிலை வகித்தார். கோட்ட பொருளாளர் சாருமதி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், 7-வது ஊதியக்குழுவின் மூலம் அமலாக்கப்பட்ட பரிந்துரைகளை வழங்க வேண்டும். இலக்கு என்ற பெயரால் அடிக்கடி மேளாக்கள் நடத்துவது. உயர் அதிகாரிகளின் அடக்கு முறைகளை கண்டிப்பது.
கிராம தபால் ஊழியர்களை பணியின் போது கசக்கி பிழியும் தொழிலாளர் விரோத போக்கினை நிறுத்திட கேட்டுக் கொள்வது. சான்றிதழ் சரிபார்ப்பு, போலீஸ் துறை விசாரணை முடிந்த கிராமபுற தபால் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுவது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கிளை தலைவர் ரவிச்சந்திரன், கிளை செயலாளர் செந்தில்குமார், கிளை பொருளாளர் சுகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.