பெருந்துறைபட்டில் குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதி

பெருந்துறைபட்டில் குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-02-27 23:00 GMT
வாணாபுரம், 

வாணாபுரம் அருகே பெருந்துறைபட்டு உள்ளது. இங்கு கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை, கோவில் தெரு, பள்ளிக்கூடத் தெரு மற்றும் ஆலய வீதி உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து 100-க்கணக்கான குரங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. இந்த குரங்குகள் வீடுகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் கேபிள் வயர்கள், வீட்டிற்கு வரும் மின் வயர்களை சேதப்படுத்தியும் வருகின்றது.

அப்பகுதியில் செல்பவர்களை குரங்குகள் துரத்தி துரத்தி கடிக்கிறது. மேலும் பள்ளி நேரங்களில் குரங்குகள் பள்ளி வளாகத்திற்குள் சென்று அசுத்தம் செய்கிறது. பள்ளி மாணவர்கள் வைத்திருக்கும் உணவு பொருட்களை பிடுங்கி செல்கிறது.

இதனால் மாணவர்கள் அன்றாடம் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக வனத்துறையினர் குரங்குளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்