திருவிழாப்பட்டியில், விபத்துகள் அதிகரிப்பு: சாலை தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
திருவிழாப்பட்டியில், விபத்துகள் அதிகரித்து இருப்பதால் சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலை தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். வேளாங்கண்ணி, நாகூர், தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த சாலை வழியாக நாள்தோறும் வந்து செல்கிறார்கள். நாகை, திருவாரூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம் ஆகிய இடங்களில் இருந்து தஞ்சை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இந்த சாலை வழியாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதன் காரணமாக சாலை எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். தஞ்சை-திருச்சி சாலையில் ஏராளமான கிராமங்களும் அமைந்துள்ளன. இதில் திருவிழாப்பட்டி கிராம பஸ் நிறுத்தம் எதிரே சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரும், அதையொட்டி அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பும் சேதம் அடைந்து இடைவெளி ஏற்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி லாரி உள்ளிட்ட கனரக வாகனங் களில் வருபவர்கள் சாலையின் குறுக்காக செல்வதை வழக்கமாக்கி உள்ளனர். இதன் காரணமாக நெடுஞ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
தடுப்புச்சுவரில் ஏற் பட்டுள்ள இடைவெளியில் செல்லும் வாகனங்களால் விபத்துகளும் அதிகரித்து உள்ளதாக திருவிழாப்பட்டி கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். சாலையின் நடுவே சேதம் அடைந்துள்ள தடுப்புச்சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.