பயங்கரவாதிகள் முகாம் மீது அதிரடி தாக்குதல்: பா.ஜனதா, இந்து முன்னணியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதை தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ஜனதா, இந்து முன்னணியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தூத்துக்குடி,
காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் பலியானார்கள். அதற்கு பதிலடியாக, அந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை இந்திய விமானப்படை அதிரடியாக தாக்கி அழித்தது.
இதை தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ஜனதா, இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராகவேந்திரா தலைமை தாங்கினார். சிவலிங்கம் முன்னிலை வகித்தார்.
நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன், பா.ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் இனிப்பு வழங்கினர். மேலும் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. பாலாஜி, சங்கரன், முத்துசிவம், பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து மக்கள் கட்சியினர் மாநில இளைஞர் அணி செயலாளர் செல்வசுந்தர் தலைமையில் சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பஜார், அய்யன்கோவில் தெரு, அத்திமரப்பட்டி விலக்கு ஆகிய இடங்களில் இந்து முன்னணி சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். தெற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மண்டல பொதுச்செயலாளர் நம்பிராஜன், 53-வது வார்டு செயலாளர் சுதன், 52-வது வார்டு செயலாளர் பாலா, வணிகர் பிரிவு செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு பா.ஜனதா நகர தலைவர் வேல்ராஜா தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இதில் பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி தலைவர் மாரிச்செல்வம், நகர இளைஞர் அணி தலைவர் காளிதாசன், நகர பொதுச்செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், தினேஷ்குமார், அமைப்பு சாரா அணி முனியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.