சிவகங்கையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் அமைச்சர் பாஸ்கரன், வைகைசெல்வன் கலந்து கொண்டனர்
சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நடைபெற்றது. இதில்அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை,
சிவகங்கை நகர் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர் செயலாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இளைஞரணி செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:– முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின்பு ஜெயலலிதா தான் தமிழகத்தை சிறப்பாக வழி நடத்தினார். நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இந்த தொகுதியில் பலமுறை எம்.பி.யாக இருந்த ப.சிதம்பரம் தொகுதிக்கு என்ன செய்தார். ஏதாவது திட்டங்களை கொண்டு வந்துள்ளாரா. சாமானிய மக்களால் அவரை சந்திக்க தான் முடியுமா.
இன்று கிராமம் கிராமமாக சென்று மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகானந்தம், சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி துனை செயலாளர் கருணாகரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோபி, மாணவரணி செயலாளர் என்.எம்.ராஜா, மருத்துவ அணி செயலாளர் கோட்டையன், முன்னாள் தலைவர் மானாகுடி சந்திரன், மகளிரணி பொருளாளர் கயல்விழி, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட துணை செயலளர் எறும்பகுடி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முத்துபாண்டி நன்றி கூறினார்.