சொத்துக்கள் பறிப்பு, ஏளனம் செய்வது என மறைமுகமாக முதியவர்கள் கொல்லப்படுகிறார்கள் புதுவை பல்கலைக்கழக நிகழ்ச்சியில் அதிர்ச்சி தகவல்
சொத்துக்களை பறிப்பது, ஏளனம் செய்தல் என மறைமுகமாக முதியவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்த சொற்பொழிவில் அதிர்ச்சியான தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.;
புதுச்சேரி,
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை 25-வது ஆண்டு வெள்ளிவிழா சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சியில் நவீன சமுதாயத்தில் வயதானோர் எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகள், சவால் கள் குறித்து துறை தலைவர் குலாம் தஸ்தகிர் விளக்கி னார். அப்போது அவர் கூறுகையில், ‘தகவல் பரிமாற்றம், தகவல் தொடர்பு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாகி வருகின்றதோ, அந்த அளவுக்கு வயது முதிர்ந்தவர்களை கொடுமைப்படுத்தும் நிலைமையும் அதிகமாகி வருகிறது. அதாவது அவர்களுடைய சொத்துகள் பறிக்கப்படுதல், ஏளனப்படுத்துதல், சேவகர்களாக பயன்படுத்துதல் மற்றும் சமுதாயத்தில் இருந்து புறக்கணித்தல் என மறைமுகமாக வயதானவர்கள் கொல்லப்பட்டு வரும் கொடுமை உலகத்தில் நடைபெற்று வருகிறது’ என்று வேதனை தெரிவித்தார்.
சமூக அறிவியல் புலமுதல்வர் பேராசிரியர் வேங்கட ரங்கோதம் தனது தலைமையுரையில், முதியோர்கள் கொல்லப்படுவதை தடுப்பதற்கான சட்டத்தை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை இணை பேராசிரியர் பிரியம்வதா, தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளின் மூலமாக தலைக்கூத்தல் மற்றும் முதியோர் வன்முறை மற்றும் கொல்லப்படுதலை பற்றிய நுணுக்கமான முறைகளை, சமூகவியல் காரணிகளை சுட்டிக்காட்டினார்.
முடிவில் பெண்ணியல் துறை தலைவர் அருணா நன்றி கூறினார்.