ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது
ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தனியார் பஸ் கிளனரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்,
திருக்கனூரை அடுத்த காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த 17 வயது ஆன சிறுமி, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வேலைக்கு செல்வதற்காக தினமும் காலையில் தனியார் பஸ் மூலம் லாஸ்பேட்டைக்கு செல்வது வழக்கம். வேலை முடிந்து அதே பஸ்சில் ஊர் திரும்புவார்.
அப்போது அதே பஸ்சில் கிளனராக வேலை பார்த்து வந்த விழுப்புரம் மாவட்டம் கிளியனூரை சேர்ந்த சூர்யா (20)வுக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பழக்கத்தை பயன்படுத்தி சூர்யா அந்த சிறுமியை வீராம்பட்டினம் கடற்கரை மற்றும் வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பிணியானார்.
அதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் புதுச்சேரி குழந்தைகள் நல குழு அதிகாரி ராஜேந்திரனிடம் முறையிட்டனர்.
அதையடுத்து அதிகாரி ராஜேந்திரன் சிறுமியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சூர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தேடப்பட்டு வந்த சூர்யா ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து போலீசார் கடப்பாவுக்கு சென்று சூர்யாவை கைது செய்தனர்.