சட்டசபையில் கவர்னர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன

சட்டசபையில் கவர்னர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

Update: 2019-02-25 23:15 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். ஆனால் கவர்னர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. அப்போது அவர்கள் சட்ட சபைக்குள் வராமல், சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவர்னர் வித்யாசாகர் ராவ், “ஆர்.எஸ்.எஸ். ஒரு மதசார்பற்ற அமைப்பு மற்றும் தனி மனிதர்களின் சுதந்திரத்தை எப்போதும் மதிக்கக்கூடியது” என கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கவர்னர் உரையை புறக்கணித்து போராட்டம் செய்தனர்.

இதுகுறித்து மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே கூறுகையில், “கவர்னர் பதவி அரசியலமைப்பு சட்டத்திற்கு உள்பட்டது. அவரின் உரை மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு இருக்குமா? அல்லது ஆர்.எஸ்.எஸ். நலனை கருத்தில் கொண்டு இருக்குமா? என சந்தேகம் எழுந்தது. எனவே நாங்கள் கவர்னரின் உரையை புறக்கணித்தோம்” என்றார். 

மேலும் செய்திகள்