கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி துணை கமிஷனர் வழங்கினார்
திருச்சியில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பியை போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் வழங்கினார்.
திருச்சி,
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீசார் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி மன்னார்புரம் ரவுண்டானா அருகே உள்ள போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.
இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் கலந்து கொண்டு, போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர், தர்ப்பூசணியை வழங்கினார். பின்னர் போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி, முக கவசம், ஒளிரும் கையுறை போன்ற உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை கமிஷனர் மயில்வாகனன் போலீசாருக்கு அறிவுரை வழங்கி பேசுகையில், “தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தினமும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும்போது, உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். விபத்து ஏற்படாத வகையில் கவனமாக பணியாற்ற வேண்டும். மேலும், நீங்கள் பணிபுரியும் இடத்தில் அருகே சுகாதாரமற்ற சூழ்நிலை காணப்பட்டால் உடனடியாக அதனை சரி செய்யவும் முயற்சிக்க வேண்டும். பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் வகையில் உங்களது பணி அமைய வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில் போலீஸ் உதவி கமிஷனர்கள் விக்னேஷ்வரன், அருணாச்சலம் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.