அணுசக்தி துறை மூலம் பாலாற்றில் ரூ.32½ கோடியில் தடுப்பணை கட்டும்பணி தொடக்கம்
கல்பாக்கம் அணுசக்தி துறை சார்பில் பாலாற்றில் ரூ.32½ கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப்பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
கல்பாக்கம்,
கல்பாக்கம் அணுசக்தி துறை வழங்கும் ரூ.32½ கோடி நிதி மூலம், தமிழக அரசின் நீர் வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலமாக, காஞ்சீபுரம் மாவட்டம் வாயலூர் பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுகிறது. இதற்கான கட்டுமானப்பணி பூமி பூஜையுடன் நேற்று தொடங்கியது.
இதில் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், பி.பென்ஜமின் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் மரகதம் குமாரவேல் எம்.பி., காஞ்சீ புரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி சுந்தரமூர்த்தி, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தியாகராஜன், ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீதர், கல்பாக்கம் அணுசக்தி துறை இயக்குனர் டாக்டர் ஏ.கே.பாதுரி மற்றும் சீனிவாஸ், வேல்முருகன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தடுப்பணை 1.19 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட இருக்கிறது. அதிகப்படியான மழைநீர் பாலாற்றில் ஓடி கடலில் கலப்பதை தடுத்து நிறுத்தி சேமிக்க உதவுகிறது.
அத்துடன் 1,500 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு தண்ணீரை 2 நீர்த்தேக்கங்கள் மூலம் சேமிக்க முடியும். 330 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலங்களின் நீர் ஆதாரத்தை பெற்று விவசாயம் செழிக்க இந்த தடுப்பணை வழிவகை செய்யும்.
நிலமட்டத்தில் இருந்து 1.5 மீட்டர் உயரமுடைய இந்த தடுப்பணை கடலில் கலக்கும் நீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுக்கும். பூமிக்கு அடியில் 8 மீட்டர் ஆழத்திற்கு அமைய உள்ள தடுப்புச்சுவரானது, கடல் நீர் மற்றும் பழைய உப்பங்கழி நீரானது பாலாற்று படுகை பகுதிக்கு ஊடுருவதை தடுத்து, நிலத்தடி நீர் பாழாவதை தடுக்கும். இந்த நவீன முறை தடுப்பணையானது சுற்றி அமைந்துள்ள பகுதிகளின் குடிநீர் மற்றும் விவசாய நீர்த்தேவைகளை போதிய அளவுக்கு பூர்த்தி செய்யும் திறன்கொண்டது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதம் நிறைவடைய உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.