லாரிகள் மோதி விபத்து 3 பெண்கள் உள்பட 7 பேர் சாவு 25 பேர் காயம்
லாரிகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பெண் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயம் அடைந்தனர்.;
நாசிக்,
மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 25 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள பிம்பல்காவ் பாஸ்வாத் பகுதியில் உள்ள 2 ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரியில் இருந்தவர்கள் கேத்ராய் பகுதியில் மத சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது இந்த விபத்து நடந்தது தெரியவந்தது.
மேலும் உயிரிழந்தவர்கள் பெயர் சுசாயில் காவாய்(வயது 66), நிவசுதி லோண்டே(70), சோபா சூர்யவன்சி(60), சுதாம் பதான்கர்(65), ஆசாபாய் கான்தேகர்(45), சம்ருதி தாண்டே(6) மற்றும் சுதாபாய் கந்தேகர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.