ஈரோட்டில் பழுதடைந்து கிடக்கும் அடுக்குமாடி குடியிருப்பு
ஈரோட்டில் பொதுமக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பழுதடைந்து கிடக்கிறது.
ஈரோடு,
ஈரோடு மரப்பாலம் நடராஜா தியேட்டர் பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அங்கு 204 வீடுகள் இருக்கிறது. இந்த குடியிருப்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தது. கட்டிடத்தின் சுவரில் பல இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் கட்டிடத்தின் உறுதி தன்மை பாதிக்கும் நிலை உள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் 204 வீடுகள் உள்ளன. மேலும், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து வசித்து வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்புகள் பழுதடைந்ததால், அதை சீரமைக்கக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். எங்களுடைய கோரிக்கையை ஏற்று அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். மேலும் மண் பரிசோதனையும் செய்யப்பட்டது. அப்போது கட்டிடம் உறுதி தன்மையோடு இருப்பதால் இடித்து புதிய வீடு கட்ட வேண்டிய அவசியம் கிடையாது என்றும், அதற்கு பதிலாக கட்டிடத்தை புனரமைத்தால் போதுமானது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியானால் எந்தவொரு நலத்திட்டமும் செயல்படுத்த முடியாது. எனவே அடுக்குமாடி குடியிருப்பை சீரமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்.
இதேபோல் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் காலி இடம் அதிகமாக உள்ளது. எனவே குடிசையில் வசிப்பவர்களுக்கு அங்கு புதிய அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். மேலும், குயவன் திட்டு பகுதியில் பல ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.