மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம் - சைலேந்திர பாபு பேச்சு
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்று ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேசினார்.;
கோவில்பட்டி,
கோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் ஜூனியர் சேம்பர் அமைப்பு சார்பில் அரசு போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது கூறியதாவது:-
மாணவர்கள் எப்போதும் கேள்விகளை கேட்பதற்கு தயங்க கூடாது. பாடங்களை நன்கு புரிந்து படிக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஏதேனும் விளையாட்டு போட்டியை கற்று கொண்டு, அதில் ஆர்வமாக இருக்க வேண்டும். படிக்கின்ற நேரத்தை வீணடிக்க கூடாது. செல்போன்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அவைகள் நமது கவனத்தை திசை திருப்பி விடும்.
ஒவ்வொருவரும் குறிக்கோளை நிர்ணயித்து செயல்பட வேண்டும். நமது குறிக்கோளை அடைவதற்கு உரிய வழிகளை தினமும் சிந் தித்து செயல்படுத்த வேண்டும். மாணவர்கள் எப் போதும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
இவ்வாறு சைலேந்திரபாபு பேசினார்.
கல்லூரி செயலாளர் செல்வராஜ், இயக்குனர் வெங் கடாசலபதி, முதல்வர் கிருஷ்ணசாமி, ஜூனியர் சேம்பர் அமைப்பு தலைவர் லட்சுமி விக்னேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
உதவி பேராசிரியர் சிவசங்கர் நன்றி கூறினார்.