மாவட்டத்தில் பேனர்கள் வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேனர்கள் வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-02-24 22:45 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சி நிர்வாகம் சார்பில், டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், உரிய அனுமதியின்றி பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை வைத்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,பேனர் மற்றும் விளம்பர தட்டிகள் வைப்பது தொடர்பாக கடுமையான விதிகள் விதிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் விதித்துள்ள நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அனுமதி இன்றியும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை வைக்கக்கூடாது. சட்டத்திற்குட்பட்டுதான் அவற்றை வைக்க வேண்டும் என்றார். இதில், நகரமைப்பு அலுவலர் சீனிவாசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணதாஸ்(டவுன்), சரவணன்(சிப்காட்), தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

வேப்பனப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, இந்துமதி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வேப்பனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

ஊத்தங்கரையில் நடைபெற்ற கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி உதவி செயற்பொறியாளர் சரவணன், இளநிலை உதவி பொறியாளர் முரளி ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளநிலை உதவியாளர் மதியழகன், பதிவரை எழுத்தர் செண்பக பாண்டியன் மற்றும் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். தேன்கனிக்கோட்டை தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபாராணி வரவேற்றார். இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்னுசாமி, சீனிவாசன், ரேணுகா, ரவிச்சந்திரன், கிருஷ்ணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள், பேனர் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்